Saturday 26 February 2011

ராசிதான் கைராசிதான் - என் ஆசை மச்சான்



 இசை : தேவா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் - சித்ரா  வருடம் : 1994

ராசிதான் கைராசிதான் உன் முகமே ராசிதான்
ராசிதான் கைராசிதான் உன் முகமே ராசிதான்
ஆத்தாடி உன் அருமையும் பெருமையும் அறிஞ்சவ இவதான் தெரியாதா
பூச்சூடி உன் நெனப்புல மெதப்புல இருப்பவ இவதான் புரியாதா
எந்நாளும் என் ஆசை மச்சானே
உன்கூடதான் நானிருப்பேன்
உன் துணையாக நல்ல இணையாக
என்றும் வாழப்பிறந்தேனே

( ராசிதான் கைராசிதான் உன் முகமே ராசிதான் ...

ஊர்சனம் வாழ்த்தும் ரசகுமாரன் உனக்கொரு குறையேது
மாமன் இல்லாது பூமியின் மீது எனக்கொரு துனையேது
கண்டாங்கி புடவை கொண்டாடும் நிலாவ கையோடு அனைச்சேனே
என்பேர மறந்து உண்பேரத்தனே என்ப்போதும் நினைச்சேனே
பனி பூப்போல் சிரிக்குது பால்போல் இருக்குது பாவை மனம்தானே...

(ராசிதான் கைராசிதான் உன் முகமே ராசிதான்

வீசுற காத்தும் வயல்வெளி நாத்தும் படிக்குது எசப்பாட்டு
ஆண் கிளி மனசும் பூங்கிளி மனசும் தவிக்குது அதக்கேட்டு
ஒன்னாக கலந்த சந்தோச உறவு எந்நாளும் விலகாது
கண்ணாடி போல கல்லால அடிச்சா தண்ணீரு உடையாது
பட்டு பாயப் போட்டது பன்னீர் தூவுது பூக்கள் நமக்காக


(ராசிதான் கைராசிதான் உன் முகமே ராசிதான்

No comments: