Sunday 20 March 2016

ஆத்தா உன் சேல - பாடலெடுத்து



இசை : ----- பாடல் : ஏகாதசி
குரல்கள் : கரிசல் திருவுடையான் வருடம் : ----

ஆத்தா உன் சேல - அந்த
ஆகாயத்தப் போல
தொட்டில் கட்டித் தூங்க
தூளி கட்டி ஆட
ஆத்துல மீன் புடிக்க
அப்பனுக்கு தல தொவட்ட
பாத்தாலே சேத்தணைக்கத் தோணும் - நான்
செத்தாலும் என்னப் பொத்த வேணும்
செத்தாலும் என்னப் பொத்த வேணும்

( ஆத்தா உன் சேல...

ஆங்... இடுப்புல கட்டிக்கிட்டு நீச்சல் பழகினதும்
உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே
வெறுந்தர விரிப்புல நான் படுத்துக் கெடந்ததுவும்
உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே
இறக்கென காயும் போது வானவில்லா தெரியும்
இத்துப்போன சேலையில் உன் சோகக்கதை புரியும்
கஞ்சி கொண்டு போகையிலே சும்மாடா இருக்கும் - நீ
சேலகட்டி இறச்ச தண்ணி சக்கரையா இனிக்கும்
சேலகட்டி இறச்ச தண்ணி சக்கரையா இனிக்கும்

( ஆத்தா உன் சேல...

அக்கா கட்டி பழகினதும் ஆடு கட்டி மேச்சதுவும்
உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே
வெக்கையில விசிரியாகும் வெயிலுக்குள்ள குடையாகும்
உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே
பொட்டிக்குள்ள மடிச்சு வெச்சேன் அழகு முத்து மாலை
காயம் பட்ட வெரல்களுக்கு கட்டுப்போடும் சேல
மயிலிறகா உஞ்சேல மனசுக்குள்ள விரியும்
வெளுத்த சேலத்திரி வெளக்குப் போட்டா எரியும்
வெளுத்த சேலத்திரி வெளக்குப் போட்டா எரியும்

( ஆத்தா உன் சேல...


13 comments:

rajendran said...

பாட்டு நெஞ்சை உருக்குகிறது. ஆத்தா, அப்பத்தா,ஆயா சேலைகள மனதில் நிறைகிறது.

Unknown said...
This comment has been removed by the author.
vishal said...

கடந்தகால வாழ்க்கை கண்ணில் நிழலாடுகிறது.

Anonymous said...

அருமையான பாடல்

Anonymous said...

அருமையான பாடல் கிராமத்தின் வாழ்க்கையே இப்பாடலாக உள்ளது

Anonymous said...

அம்மா பற்றி வந்த பாடல்களில் முதலிடத்தில் இருக்கும் பாடல். உள்ளம் உருகி கண்களில் ஈரம் கசிகிறது.

Unknown said...

அருமை

Unknown said...

அருமை

Unknown said...

Supper song continue.

Rajamanoharan T E said...

செக்கானூரணி இலக்கியகூடலில்(தமுஎச) ஏகாதசி 1995 ஆம் ஆண்டுதீப்பொறிகள் கவிதைகள் கண்டதாக ஞாபகம்.இன்று

Rajamanoharan T E said...

1995ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் செக்கானூரணி தமுஎகச இலக்கிய கூடலில் கவிஞர்.ஏகாதசியின் தீப்பொறிகள் கவிதைகளை கண்டிருக்கிறேன்.

Unknown said...

If the lyrics in english, other language ppl may have more easy to by heart the song....

Unknown said...

If the lyrics in english, other language ppl may have more easy to by heart the song....