| இசை : ஏ.ஆர்.ரகுமான் | பாடல் : வைரமுத்து |
| குரல்கள் : உன்னிமேனன்-சுஜாதா | வருடம் : 1992 |
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மணம் சூடான இடம் தேடி அலைகின்றது
( புது வெள்ளை...
நதியே நீயானால் கரையாவேன்
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே
( புது வெள்ளை...
பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூ பூப்தில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது
( புது வெள்ளை...
நீ அணைக்கின்ற வேளையில் உயிர் பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஓடினால் உயிர் பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதே
மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ
( புது வெள்ளை...
No comments:
Post a Comment