| இசை : ஏ.ஆர்.ரகுமான் | பாடல் : வைரமுத்து |
| குரல்கள் : மின்மினி | வருடம் : 1992 |
சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை
( சின்ன சின்ன ஆசை...
மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டு விட ஆசை
சோகங்களையெல்லாம் விட்டு விட ஆசை
கார்குழலில் உலகை கட்டி விட ஆசை
( சின்ன சின்ன ஆசை...
சேற்று வயலாடி நாற்று நட ஆசை
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில்விட ஆசை
வானவில்லை கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை
சித்திரத்து மேனி சேலை கட்ட ஆசை
( சின்ன சின்ன ஆசை...
No comments:
Post a Comment