| இசை : ஜி.வி.பிரகாஷ் | பாடல் : சினேகன் |
| குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ்.பி.பி.சரண்-பிரஷாந்தினி | வருடம் : 2010 |
அய்யய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்ன பார்த்த அந்த நிமிஷம்
ஒரஞ்சு போச்சே நகரவே இல்லே
தின்ன சோறும் செரிக்கவே இல்லே
பொலம்புறேன் நானே...
உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுர சத்தம்
உன் பேரா கேக்கிறதே
( அய்யய்யோ நெஞ்சு...
உன்ன தொடும் அனல் காத்து
கடக்கையிலே பூங்காத்து
கொழம்பி தவிக்குதடி என் மனசு
ஹோ திருவிழா கடைகள போல
திணருறேன் நான் தானே
எதிரில் நீ வரும் போது
மிரளுறேன் ஏன் தானோ
கண் சிமிட்டும் தீயே
என்னை எரிச்சுபுட்டே நீயே
( அய்யய்யோ நெஞ்சு...
மழை சாரல் விழும் வேளை
மண் வாசம் அனல் வீச
உன் மூச்சு தொடவே நான் மெதந்தேன்
ஹோ...கோடையில அடிக்கிற மழையா
நீ என்ன நெனைச்சயே
ஈரத்திலே அணைக்கிற சொகத்த
பார்வையிலே கொடுத்தாயே
பாதகத்தி என்ன ஒரு பார்வையால கொன்ன
ஊரோட வாழுர போதும் யாரோடும் சேரலை நான்
( அய்யய்யோ நெஞ்சு...
No comments:
Post a Comment