Saturday 12 March 2011

கொஞ்சநாள் பொறு தலைவா - ஆசை



 இசை : தேவா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 1995

கொஞ்சநாள் பொறு தலைவா – ஒரு
வஞ்சிக்கொடி இங்க வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா – அந்த
வெண்ணிலவ தோக்கடிப்பா
காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன்
ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபுடி
ராவோடு ராவாக அள்ளிவர நாங்களடி

ஓ... நேத்துக்கூட தூக்கத்துல பார்த்தேன் அந்த பூங்குயில
தூத்துக்குடி முத்தெடுத்து கொத்து வச்ச மாலை போல
வேத்துகொட்டி கண்விழிச்சு பாத்தா
அவ ஊடிபோனா உச்சிமல காத்தா
சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே வந்து நிப்பா
சொல்லப்போனா பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா
வத்திகுச்சி இல்லாமலே காதல் தீய பத்தவைப்பா
தேனாறு பாலாறு போல வந்த கண்ணுக்குள்ள
தேசியக்கொடி போல குத்திவச்சேன் நெஞ்சுக்குள்ள
ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபுடி
ராவோடு ராவாக அள்ளிவர நாங்களடி

( கொஞ்சநாள் பொறு...

பச்சைதாவணி பறக்க அங்கு தன்னையே அவன் மறக்க
வெச்ச கண்ணு வாங்களியே என் மாமன் கண்ணு தூங்கலியே

என்னோடுதான் கண்ணாமூச்சி என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
கட்டாயம் என் காதல் ஆட்சி கைகூடும் பார் தென்றல் சாட்சி
சிந்தனையில் வந்து வந்து போறா அவ சந்தனத்தில் செஞ்சு வச்ச தேரா
என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணமெங்கும் ஒட்டி வெச்சேன் வண்ண சித்திரமா
வேறொருத்தி வந்து தங்க என் மனசு சத்திரமா
ஆத்தாடி அம்மாடி என்ன சொல்ல கட்டழக
ஆவாரம் பூவாட்டாம் வாய் வெடிச்ச மொட்டழக
ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபுடி
ராவோடு ராவாக அள்ளிவர நாங்களடி

( கொஞ்சநாள் பொறு...

No comments: