Tuesday 5 April 2011

காற்றிலே காற்றிலே - மதராசப்பட்டினம்



 இசை : ஜி.வி.பிரகாஷ்  பாடல் : நா.முத்துகுமார்
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 2010

ஆயிரம் ஆயுதம் எதிர்வரும் போதும்
அன்பெனும் சக்தியை வென்றவரில்லை
காரிருள் நீங்கிடும் காலியில் மறுபடி
கிழக்கினில் ஒளி வருமே
பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்
பாதையில் பள்ளங்கள் பறித்திடும் போதும்
போர்களம் நடுவிலும் ரகசியமாக
பூவொன்று மலர்ந்திடுமே

காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே
கண்களின் நீரது காற்றினில் சேருதே
நீயென்று நானென்று தனியானது – இன்று
நாமென்று ஒன்றாகும் நிலையானது
நெஞ்சோடு நேசித்த பந்தமிது – இன்று
கைசேர கண்ணீரே விலையானது

( ஆயிரம் ஆயுதம் ....

நதிபோகும் வழியில் யாரும் அணைபோட்டு தடுத்திடக் கூடும்
மேகத்தில் அணைபோட வழியில்லையே
நிகழ்காலம் கண்ணின் முன்னே
வரும்காலம் கனவின் பின்னே
விதிபோடும் கணக்குக்கு விடையில்லையே
இரவும் பகலும் தொடரும்
வெயிலும் மழையும் தொடரும்
இதயம் இணையும் தருணம் வருமா
இருளும் ஒளியும் பழகும்
விடிந்தும் விடியா நிமிடம்
விடிந்தால் வாழ்க்கை தொடங்கும் கனவா

( பேய்களும் நரிகளும் ....

ஒருவானம் போதாதென்று பலவானம் கேட்போம் இன்று
கைகோர்த்து ஒன்றாக பறந்தோடவே
நெடுங்காலம் கனவில் வாழ்ந்தோம்
இப்போது கைகள் சேர்த்தோம்
இறந்தாலும் இருப்போமே பிரியாமலே
இரவும் பகலும் யுத்தம்
இடையில் உயிரின் சத்தம்
இதயம் முழுதும் கேட்டால் சுகமே

எதிரும் புதிரும் பாரம்
எங்கள் நெஞ்சில் ஈரம
அன்பே என்றும் இன்பம் தருமே

( ஆயிரம் ஆயுதம் ....

No comments: