Friday 1 April 2011

ஒரு மணி அடித்தால் - காலமெல்லாம் காதல் வாழ்க



 இசை : தேவா  பாடல் :
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 1997


ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோஃன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
பாடினால் அந்தப் பாடலின் ஸ்வரம் நீயடியோ
தேடினால் விழி ஈரமாவதும் ஏனடியோ

(ஒரு மணி...

வாசம் மட்டும் வீசும் பூவே வண்ணம் கொஞ்சம் காட்டுவாயா
தென்றல் போல எங்கும் உன்னை தேடுகிறேன் நான் தேடுகிறேன்
தேடி உன்னைப் பார்த்துப் பார்த்து கண்கள் ரெண்டும் வேர்த்து வேர்த்து
சிந்தும் விழி நீரில் நானே மூழ்குகிறேன் நான் மூழ்குகிறேன்
வீசிடும் புயல் காற்றிலே நான் ஒற்றைச் சிறகானேன்
காதலின் சுடும் தீயிலே நான் எறியும் விறகானேன்
மேடைதோறும் பாடல் தந்த வான்மதியே
ஜீவன் போகும் முன்பு வந்தால் நிம்மதியே
போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

(ஒரு மணி...

உந்தன் முகம் பார்த்த பின்னே கண்ணிழந்து போவதென்றால்
கண்கள் ரெண்டும் நான் இழப்பேன் இப்போதே நான் இப்போதே
உந்தன் முகம் பார்க்கும் முன்னே நான் மறைந்து போவதென்றால்
கண்கள் மட்டும் அப்பொழுதும் மூடாதே இமை மூடாதே
காதலே என் காதலே எனை காணிக்கை தந்துவிட்டேன்
சோதனை இனி தேவையா சுடும் மூச்சினில் வெந்துவிட்டேன்
காதல் என்னும் சாபம் தந்த தேவதையே
காணலாமோ ராகம் நின்று போவதையே
போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

(ஒரு மணி...

No comments: