Sunday 1 May 2011

தமிழுக்கும் அமுதென்று பேர் - பஞ்சவர்ணக்கிளி



 இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்  பாடல் : பாரதிதாசன்
 குரல்கள் : பி.சுசீலா  வருடம் : 1965

தமிழுக்கும் அமுதென்று பேர் ! – அந்த
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்னறு பேர் ! – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர் ! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருபித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர் !
தமிழுக்கு மதுவென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் உரிமை செம்ப்யிர்க்கு வேர்

( தமிழுக்கும் அமுதென்று...

தமிழ் எங்கள் இளமைக்கு பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல் புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் –இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்கு சுடர்தந்த தேன் சுடர்தந்த தேன்

( தமிழுக்கும் அமுதென்று...

தமிழ் எங்கள் அறிவுக்கு தோள் – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வைரத்தின் வாள் வைரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

( தமிழுக்கும் அமுதென்று...

1 comment:

Unknown said...

"பேஹாக்" ராகத்தில் அமைக்கப்பெற்ற இந்த இனிய பாடல், சுசீலா அம்மையாரின் குரல் வடிவம் பெற்று, வானவீதியில் நீந்த தொடங்கியது.