Sunday 1 May 2011

சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்



 இசை : ஏ.ஆர்.ரகுமான்  பாடல் : பாரதியார்
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 2000

சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரியவிழி கண்ணம்மா வானக் கருமை கொள்ளோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல் வைரம்
நட்ட நடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி

சோலை மலரொளியோ உனது சுந்தரப் புன்னகைதான்
நீலக் கடலலையே உனது நெஞ்சின் அலைகளடி
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடி
வாலைக் குமரியடி கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் சாத்திரம் ஏதுகக்டி
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடி
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடி இது பார் கன்னத்து முத்தம் ஒன்று

No comments: