Wednesday 5 December 2012

கடலில எழும்புற அலைகள - செம்பருத்தி



இசை : இளையராஜா பாடல் : கவிஞர் வாலி
குரல்கள் : இளையராஜா வருடம் : 1992

கடலில எழும்புற அலைகள கேளடி ஓ மானே
மீனவர் படுகின்ற அவதிகள் கூறிடும் ஓ மானே
கடல் தண்ணி கரிக்குது காரணம் இருக்குது ஓ மானே
உடல் விட்ட வேர்வைகள் கடல் வந்து கலக்குது ஓ மானே

பூமரங்கள் எத்தனையோ பூமியிலே காய்க்குது
பாய்மரம்தான் நாங்க கொண்ட பட்டினிய தீர்க்குது...
பிள்ளைகுட்டி எங்களுக்கு பாசவலை வீசுது
எங்கசனம் மீன்பிடிக்க ஈரவலை வீசுது
ஊரைநம்பி வாழ்ந்திடாமே நீரைநம்பி வாழுறோம்
கால்பிடிச்சு வாழ்ந்திடாமே மீன்பிடிச்சு வாழுறோம்
மானே ஓ மானே

( கடலில எழும்புற அலைகளை

தூரக்கடல் போனவனை தாரம் நின்னு தேடுவா
தோணி வந்து சேரும் வரை ஆடியே அல்லாடுவா
பெத்தெடுத்த பிள்ளையுடன் தத்தளிச்சு வாடுவா
நெத்திப் பொட்டை காக்க சொல்லி சாமிகள வேண்டுவா
மீனவர்கள் வாழ்க்கை என்றும் முள்ளுமேல வாழைதான்
சூறக்காத்து ஆட்டி வைக்கும் சின்னத்தென்னம் பாளைதான்
மானே ஓ மானே

( கடலில எழும்புற அலைகளை


No comments: