Sunday 6 March 2011

நான் வானவில்லையே பார்த்தேன் - மூவேந்தர்



 இசை : சிற்பி  பாடல் : அறிவுமதி
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 1998

நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
நான் வானவில்லையே பார்த்தேன்
அதைக் காணவில்லையே வேர்த்தேன்
ஒருக்கோடி மின்னலை பார்வை ஜன்னலாய்
வீசச்சொல்லியாக் கேட்டேன் - இனி நிலவை பார்க்கவே மாட்டேன்
ஓ...ஓ...ஓ...ஓ...

கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென மயிலும் நடனமிடுமோ
பூவில் ஆடிவரும் வண்டு இமையில் விழ கண்களாகிவிடுமோ
தேடித் தின்றுவிட ஆசைக்கிள்ளுதடி தேனில் செய்த இதழோ
மூடிவைத்த முயல் மூச்சுமுட்டுதடி மீட்க என்ன வழியோ
பகல்நேரம் நிலவைப் பார்த்தது நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது ஆறுதல் சொல்லம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா

( நான் வானவில்லையே பார்த்தேன்

சேலை சூடியொரு சோலை போன வழி பூக்கள் சிந்திவிழுமோ
பாறையான மனம் ஈரமானதடி பார்வை தந்த வரமோ
பாதம் பட்ட இடம் சூடு கண்டு உனை நானும் கண்டுவிடுவேன்
காதலான மழை சாரல் தூவிவிட மார்பில் ஒதுங்கி விடுவேன்
பொய்மானைத் தேடிசென்றது ராமனின் கண்ணம்மா
மெய்மானைத் தேடிசென்றது மாறனின் நெஞ்சம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா

( நான் வானவில்லையே பார்த்தேன்

No comments: