Monday 7 March 2011

பாதகொலுசு பாட்டு – திருமதி பழனிசாமி



 இசை : இளையராஜா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்  வருடம் : 1992

பாதகொலுசு பாட்டு பாடிவரும் பாடிவரும்
பாவசொகுசுப் பாக்க கோடிபெரும் கோடிபெரும்

சித்தாட போட்ட சின்னமணித் தேரு
சில்லுன்னு பூத்த செவ்வரளிப் பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் செலதான்

( பாதகொலுசு பாட்டு ...

குத்தால மேகமெல்லாம் கூந்தலிலே நீந்திவரும்
கொய்யாத மாங்கனியை கொடியிடைதான் ஏந்திவரும்
மத்தாப்பு வானமெல்லாம் வாய்சிரிப்புக் காட்டிவரும்
மானோடு மீனிரண்டை மைவிழியோ கூடிவரும்
பொன்னாக ஜொலிக்கும் பெண்பாவை அழகு
ஒன்னாக கலந்த முந்நூறு நிலவு
பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில்தான்

( பாதகொலுசு பாட்டு ...

செஞ்சாந்து குழம்பெடுத்து தீட்டிவைத்த சித்திரமே
தென்பாண்டி கடல்குளித்து கொண்டுவந்த முத்தினமே
தொட்டாலும் கைமணக்கும் தென்பழனி சந்தனமே
தென்காசித் தூரலிலே கண்விழித்த சென்பகமே
பெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோ
ஈரேழு உலகில் ஈடாக யாரோ
நெஞ்சோடு கூடுகட்டிக் கூவும் குயிலோ

( பாதகொலுசு பாட்டு ...

பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவளொருத்தி
பொன்வைரம் கொடுத்தாலும் போதாது சீர்சனத்தி
கல்யாண பந்தலிலே நான் அவளை நேர்நிறுத்தி
பூமாலை சூடிடுவேன் மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி
அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி
கண்டேனே எனக்கு தோதான ஜோடி
வந்தாச்சு காலநேரம் மாலையிடத்தான்

( பாதகொலுசு பாட்டு ...

No comments: