Sunday 6 March 2011

தங்கத்தாமரை மகளே - மின்சாரகனவு



 இசை : ஏ.ஆர்.ரகுமான்  பாடல் : வைரமுத்து
 குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்  வருடம் : 1997

தங்கத்தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வ அழகே
வெள்ளம மன்மத வெள்ளம - சிறு
விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே

( தங்கத்தாமரை மகளே...

தங்கத்தாமரை மகளே வா அருகே
தங்கத்தாமரை மகளே இளமகளே வா அருகே
செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே - என்
கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே
வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே
உன் கனத்த கூந்தல் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேன்
இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க
தொடட்டுமா தொல்லை நீக்க

( தங்கத்தாமரை மகளே...

பறக்கும் வண்டுகள் பூவில்கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையை சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் கார்காலம்
நகம் கடிக்கும் பெண்ணே நகர்த்தாதே ஆசை
நாகரீகம் பார்த்தாலே நடக்காது பூசை
நெருக்கமே காதல் பாஷை...


( தங்கத்தாமரை மகளே...

No comments: