Tuesday 8 March 2011

மனம் விரும்புதே - நேருக்கு நேர்



 இசை : தேவா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 1997

மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடி நெஞ்சில் உன் முகம்தானடி
அயய்யோ மறந்தேனடி உன்பேரே தெரியாதடி

( மனம் விரும்புதே...

அடடா நீயொரு பார்வை பார்த்தாய்
அழகாய்தானொரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என்மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடி என் நெஞ்சம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே.... மனம் ஏங்குதே....
மீண்டும் பார்க்க... மனம் ஏங்குதே....

( மனம் விரும்புதே...

மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறைப் போல் என்னுள்ளம் இருந்ததடி
மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலையாட்டும் சிறு பூவைப் போலே
பொல்லாத இளம் காதல் பூத்ததடி
சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலியே
நெஞ்சோடு காதல் வருமென்று நேற்று வரை நம்பலியே
என் காதலி.... என் காதலி....
நீ பார் ... என் காதலி....

( மனம் விரும்புதே...

No comments: