Tuesday 8 March 2011

தாய்மடியே உன்னைத்தேடுகிறேன் - ரெட்



 இசை : தேவா  பாடல் :
 குரல்கள் : திப்பு  வருடம் : 2000

தாய்மடியே உன்னைத்தேடுகிறேன்
தாரகையும் உருகப் பாடுகிறேன்
பத்துத் திங்கள் என்னை சுமந்தாயே – ஒரு
பத்தே நிமிடம் தாய்மடி தா தாயே
நீ கருவில் மூடிவைத்த என்னுடம்பு
நடுத் தெருவில் கிடக்கிறது பார் தாயே
உதிரம் வெளியேறும் காயங்களில் – என்
உயிரும் ஒழுகுமுன்னே வா தாயே
தெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கிறேன்...

( தாய்மடியே உன்னைத்...

விண்ணை இடிக்கும் தோள்கள் மண்ணை அளக்கும் கால்கள்
அள்ளிக் கொடுத்த கைகள் அசைவிழந்ததென்ன
கனல்கள் தின்னும் கண்கள் கனிந்து நிற்கும் இதழ்கள்
உதவி செய்யும் பார்வை உயிர் குலைந்ததென்ன
பாரதபோர்கள் முடிந்த பின்னாலும் கொடுமைகள் இங்கே குறையவில்லை
ஏசுகள் என்றோ மமாண்ட பின்னாலும் சிலுவைகள் இன்னும் மரிக்கவில்லை

( தாய்மடியே உன்னைத்...

படைநடத்தும் வீரன் பசித்தவரகள் தோழன்
பகைவருக்கும் நண்பன் படும் துயரமென்ன
தாய்ப்பாலாய் உண்ட ரத்த்தம் தரை விழந்ததென்ன
இவன் பேருக்கேற்ற வண்ணம் நிலம் சிவந்ததென்ன
தீமைகள் என்றும் ஆயுதம் ஏந்தி தேர்களில் ஏறி வருவதென்ன
தர்மங்கள் என்றும் பல்லக்கில் ஏறி தாமதமாக வருவதென்ன

( தாய்மடியே உன்னைத்...

No comments: