Sunday 1 May 2011

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு - வைதேகி காத்திருந்தாள்



 இசை : இளையராஜா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : ஜெயசந்திரன்  வருடம் : 1984

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே உன்னத் தேடுது

( ராசாத்தி உன்ன...

கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே

( ராசாத்தி உன்ன...

மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

( ராசாத்தி உன்ன...

5 comments:

Kalai said...

This song is very close to my heart. Thanks for sharing.

Unknown said...

வாழ்தாக வேண்டும் வா வா கண்ணே வரிகளை இன்னும் இன்னிசையால் வடிவமைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது

Unknown said...

Was

aps A said...

இதயத்திற்கு இதமான இனிமையான இரவுப்பாடல்.....

Unknown said...

Balakrishnanartistpadakar